மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தினம்

மட்டக்களப்பு மேற் கல்வி வலய தமிழ்மொழித்தினபோட்டியும், இறுதி நிகழ்வும் நேற்று(26) வெள்ளிக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் உருவப்படத்திற்கு சுடேர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர் தூபி வணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், வலயமட்ட போட்டியில் முதலிடங்களைப் பெற்ற குழுப்போட்டி நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.

இதன்போது, போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டத்தரப்படுத்தலில் மண்முனை தென்மேற்கு கோட்டம், அதிகூடிய புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும், மண்முனை மேற்கு கோட்டம் இரண்டாம் இடத்தினையும், ஏறாவூர் கோட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருந்தன. இதற்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கோ.குகன், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் ரஞ்சிதமலர் கருணாநிதி, பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விசார் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Published from Blogger Prime Android App