ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் யானைத் தாக்குதலினால் நபரொருவர் பலி!
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி சமிளையடி வட்டைப் வயல் பிரதேசத்தில் உள்ள வீதியால் அதிகாலை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.


மண்டூர் 3ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி யோகநாதன்(வயது54)என்பவரே இவ்வாறு உயிரிழந்தவரவார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.