கொரோனா நிலைமை புறக்கணிக்கப்படுவதால் பேரழிவு நிலை உருவாகலாம்!-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால், கட்டுப்பாடில்லாமல் கொரோனா வைரஸ் பரவிவருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நோய் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாகவும், எனினும் எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனா பாதிப்புக்களாகவே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App