மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய தொழில்நுட்ப குழு நியமனம்!

தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமையால் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புக்கும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழு இது தொடர்பான அறிக்கையை இந்த வார இறுதிக்குள் கையளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App