விடுமுறையில் வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய நிபந்தனை!

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், அரசாங்க ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டிற்குச் செல்லும் அரச ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும்.
Published from Blogger Prime Android App