குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் !

குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே அவர்களை கைது செய்ய சர்வதேச நீதி அமைப்பை அமல்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இலங்கை இராணுவ அதிகாரிகள் செல்லமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published from Blogger Prime Android App