கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் வெற்றிடமாக உள்ள, நான்கு வலயங்களுக்கான வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை நிரப்ப விண்ணப்பம் கோரல்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் வெற்றிடமாக உள்ள, நான்கு வலயங்களுக்கான வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை நிரப்ப விண்ணப்பங்களை கோரியுயுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் வலயங்களுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 12 .9. 2022 ஆகும்.

மேலதிக விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் கிழக்கு மாகாண சபையின் https://www.ep.gov.lk/en/ என்ற இணையதளத்தில் பிரவேசித்து ministry of education என்ற பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ டபிள்யூ ஜி. திசாநாயக்க தெரிவித்தார்