ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
