சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவு சம்பந்தமான தகவல்களுக்கு விஷேட தொலைபேசி இலக்கம்!

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.

இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.