அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் விற்பனை இடம்பெறுவதனை கண்டறிய சோதனை நடவடிக்கை!




இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது.

மொத்த விற்பனையாளர்களுக்கு தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டது.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அந்த நன்மையை நுகர்வோருக்கு அளிக்கிறார்களா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்படுகின்றன.