ஜனாதிபதி மாளிகைக்குள் மற்றும் அலரி மாளிகை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது !

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (08) கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகிய பின்னர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர். கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு 03 பகுதியில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Published from Blogger Prime Android App