சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார் - நாமல் ராஜபக்ஷ !

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும் நாட்டில் கிளர்ச்சி உருவாகும் பட்சத்தில், அதை அடக்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Published from Blogger Prime Android App