2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (28) திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் மண்டூரைச் சேர்ந்த தோல் விஷேட வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணனின் என்பவரின் மூத்த மகனாவார் என்பதோடு இவருடைய தாயாரான காரைதீவைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.பகீரதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.