சில அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்!

சில அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன.

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிஸ்கட், சவர்க்காரம், சலவை தூள், உடனடி நூடில்ஸ், சோயா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன.

அதிக விலைக் காரணமாக சில பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
Published from Blogger Prime Android App