கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக்கலைகூடமும், அருங்காட்சியகமும் திறப்பு விழா.மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட இந்து நாகரீகத்துறையில் இந்துக்கலைகூடமும், அருங்காட்சியகமும் திறப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை(10) இடம்பெறவுள்ளது.

கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்

தலைமையிலும், இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி வ.குணபாலசிங்கம் துணைத்தலைமையில், யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், கிழக்குப்பல்கலைக்கழக வேந்தர் மா.செல்வராசா, பேராசிரியர் சி.மௌனகுரு முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் திபின்.பீ.ஆர், விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் க.கருணாகரன், சிறப்பு அதிதியாக கலை, கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் ஜீ.கென்னடி உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.