புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்! அமைச்சு பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு முதலிடம் !

புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால வரவு – செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

திருத்தப்பட்ட இடைக்கால வரவு – செலவுதிட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published from Blogger Prime Android App