வெளிநாட்டுத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெருவிப்பு
சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இலங்கை அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என சீசெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன், தெரிவித்துள்ளார்.

இதேவேளை டென்மார்க் பிரதமர், தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

​​இரு நாடுகளினதும் பாரம்பரிய மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் முன்னேற்றமடையும் என நம்புவதாக செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார்.