கோட்டாபய நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல் !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பின்னணியிலேயே இம்மாதம் திட்டமிடப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் எதிர்ப்பை அடுத்து மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்று ஜூலை மாதம் 9 ஆம் திகதி பதவியை கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

அதன் அடிப்படையில் மிரிஹானவில் உள்ள அவரது இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App