சீரான உளவளத்தை பேணுவதற்காக சிறந்த ஆசிரியர் சிறந்த பாடசாலை என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை!
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களையும் அழைத்து இன்று எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு பயிற்சிப்பட்டறை மாணவர்களின் சீரான உளவளத்தை பேணுவதற்காக சிறந்த ஆசிரியர் சிறந்த பாடசாலை (Good Teacher & Good School ) என்ற தலைப்பில் எமது பணிமனை முன்னெடுக்கும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
Dr. Dan Soundararajah , மாவட்ட உளநல ஒருங்கிணைப்பாளரின் தலைமையில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. Sujatha Kulendran பிரதம விருந்தினராக பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
Dr. Achchuthan Muthulingam, Dr. Dharshini Murugupillai, Dr. Kasthuriye Kuhan ஆகியோர் இணைந்து தங்களது முழுமையான பங்களிப்பை வளங்கினர்.
இளவயது கர்ப்பம், சமூகப்பிறழ்வு , போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள், விபத்துக்கள், தற்கொலைகள் மலிந்துள்ள இந்தக்காலத்தில் சமூகத்தை சரியாக வழிநடத்த இயலுமையுள்ள அனைவரும் தங்கள் பங்களிப்பை தரவேண்டுமல்லவா.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மாகாண சுகாதார பணிப்பாளர் Dr. மொகமட் தௌபிக், கிழக்கு மாகாண ஆளுனர் அனைவரும் உந்துதலாக இருப்பது மகிழ்ச்சியானது.
எல்லாவற்றையும்விட வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், கவுன்சிலிங்க் ஆசிரியர்கள், சிறுவர் பாதுகாப்பு, கவுன்சிலர்ஸ்,  படையணி அனைவரும் ஆதரவாக இருப்பது மாணவர்களின் நல்வழிப்படுத்தலில் நிட்சயமாக பாரிய மாற்றத்தை கொண்டுவரும்.
விரைவில் நாங்கள் நீதித்துறை, பொலிசார் , முப்படையினர் என இந்த திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டியவர்களை எல்லோருடனும் கலந்துரையாடலொன்றை நடத்த இருக்கின்றோம்.
Adolescent Health எனும் திட்டத்தின் மூலம் பாரியதொரு வலைப்பின்னலை உருவாக்கியுள்ளதுடன் கடந்த மூன்று மாதங்களாக பலரையும் தயார் படுத்தி பல பயிற்சிப்பட்டறைகளை முடித்துள்ளோம்.
எங்கும் செல்வோம் இதிலும் வெல்வோம்
மகிழ்ச்சி
Dr. குணசிங்கம் சுகுணன்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பு.