மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ கொடியேற்ற நிகழ்வுகள்.
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ கொடியேற்ற நிகழ்வுகள் நேற்றிரவு(21) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார்,ஆலய நிர்வாகிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர்.தீர்த்தோற்சவமானது எதிர்வரும் 10.08.2022 ம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.