உள்ளூர் மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் - மதுவரித் திணைக்களம் !

உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மதுபான ஏற்றுமதி மூலம் 2 கோடியே 50 லட்சம் டொலர்கள் வருவாய் கிடைத்ததாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்தில் ஏற்றுமதி மூலம் 5 கோடி அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையில் உற்பத்தியாகும் மதுபான வகைகளின் தர கட்டுப்பாட்டை பேணும் நோக்கில் சில நடவடிக்கைகளை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக தற்போது பரிசோதனை மற்றும் தர கட்டுப்பாட்டை பேணுதல் போன்றவற்றை திறம்பட முன்னெடுப்பதற்காக ஆய்வுகூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
Published from Blogger Prime Android App