அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்கப்படும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு !

உற்பத்தியாளர்களினால் அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகளை அரசுடைமையாக்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published from Blogger Prime Android App