ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை

பெரும்போகத்திற்குத் தேவையான மிகுதி யூரியா உரத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியுடன் இணைந்து செயற்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள், உலக வங்கியுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்திற்காக இன்னும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யூரியா உரம் தேவைப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் விளைச்சலுக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.