தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து நேற்றையதினம் மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், கால்நடை வளர்ப்போர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App