மட்டக்களப்பு மாவட்ட சுகாதார மீளாய்வு


 மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ARM. தௌபிக், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. Costa பங்களிப்புடன் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தலைமையில் இன்று(19) நடைபெற்றது. பிரதி பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் மயூரன் நாகலிங்கம்     பிராந்திய பணிமனையில் பிராந்திய தலைவர்கள் , வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச வைத்திய அதிகாரிகள் , சுகாதார வைத்திய அதிகாரிகள் என பிராந்தியத்தின்  அனைவரும் பங்குகொண்ட கலந்துரையாடலில் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார நிலமை, அபிவிருத்தி திட்டங்கள், மருந்து பொருட்களின் கையிருப்பு, கர்ப்பிணித்தாய்மார் பராமரிப்பு, சிறுவர்கள் , மாணவர்கள் நிலமை, போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்தல், டெங்கு , கொவிட்-19 நிலமை, பற்சுகாதாரம், உணவுப்பாதுகாப்பு , தரமுகாமைத்துவம், தொற்றாநோய்கள், நிருவாகம் , நிதிநிலமை, பாலியல்நோய், திட்டமிடல் என விலாவாரியாக விவாதிக்கப்பட்டது.
அத்துடன் அடுத்த வாரத்துடன் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளராக இடமாற்றம் பெற்று செல்லும் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபிக் இன் சேவையை கௌரவித்து பாராட்டப்பட்டதுடன். புதிய மாகாணப் பளிப்பாளர் வைத்தியர் கோஸ்ரா அவர்களையும் வரவேற்று கௌரவமளிக்கப்பட்டது.