பொலிஸ் சட்டப் பிரிவின் தலைவராக எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர நியமனம் !

இலங்கை பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஒப்புதலுக்கு உட்பட்டு கடந்த 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App