கோட்டா கோ கம பிரான்ஸ் செயற்பாட்டாளர் இலங்கை வந்த போது கைது

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டப் பிரசாரத்திற்கு ஆதரவாக பாரிஸில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட நபரொருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸில் வசிக்கும் இவர் இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க வந்த போது, ​​நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நிட்டம்புவையில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வன்முறையின் போது சந்தேக நபர் இலங்கையில் இருந்ததாகவும், பின்னர் அவர் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை இலங்கைக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App