பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி!

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார்.

09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார்.

இந்த தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App