இன்று இடம்பெறும் சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
சபை ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் எதிர் தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை 2022ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவு செலவு திட்ட வரைபு இன்று சபையில் சமர்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது , அத்துடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த வரைபு நாளை சபையில் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
