மட்டக்களப்பு கிராங்குளத்தில் சத்யசாயி சஞ்ஜீவனி இலவச இருதய சத்திரசிகிச்சை வைத்தியசாலை திறந்து வைப்பு.
மட்டக்களப்பு கிராங்குளத்தில் சத்யசாயி சஞ்ஜீவனி இலவச இருதய சத்திரசிகிச்சை வைத்தியசாலை அமைப்பின் தற்போதைய பிதா சுவாமி ஶ்ரீ மதுசுதன் சாய் அவர்களினாலும் பென்னி ஜயவர்த்தனா அவர்களாலும் பல முக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் ஆண்டுதோறும் 3000 குழந்தைகள் இருதய பாதிப்புடன் பிறந்தாலும் அரச வைத்தியசாலைகளில் 50% சிறார்களே சத்திரசிகிச்சைக்கு உட்படுகிறார்கள்.
இந்த வைத்தியசாலை கொழும்பு லேடி ரிட்ஷ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் எமது வைத்தியசாலையுடனும் இணைந்து சிறுவர்களுக்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவிருக்கிறது.

கிராங்குளத்தில் 50 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலைக்குரிய நிலத்தை களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த சாய் பக்தர் ஒருவர் அன்பளிப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.