நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கம் - ஜனாதிபதி !

நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகில் ஏனைய நாடுகள் சாதனைகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணையாத காரணத்தினால் பின்னோக்கி செல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வரலாற்று தவறை சரிசெய்து அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App