நாளையும் நாளை மறுநாளும் நடைபெற இருந்த ஆசிரியர் நியமனம் ஒத்திவைப்பு!
திருகோணமலை மாவட்டத்திற்கான பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளும் நேர்முக பயிற்சி நாளை(23) செவ்வாய்க்கிழமையும் நாளை மறுதினம்(24) புதன்கிழமையும் நடைபெற இருந்தது.


இரண்டு நாட்களுக்குமான நேர்முக பயிற்சி தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணை குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சை க்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.