நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட அமர்வு இன்று!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 10,30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் மின்சார கட்டணம் நூற்றுக்கு 75 வீதம் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ளதோடு இந்த பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்துவரும் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவுகளுக்காக வரவு செலவு திட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் அடுத்த மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App