திருத்தப்பட்ட BUDJET 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்!

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் எனவும் பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அங்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.
Published from Blogger Prime Android App