அமைச்சர் காஞ்சன விஜேசேகர CIDயில் முறைப்பாடு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிப்பீடு செய்தல், முன்பதிவு செய்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமை, விநியோகஸ்தர்கள் தெரிவு மற்றும் விநியோக முறைமை குறித்து இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Published from Blogger Prime Android App