ஐ. நா வையும், தமிழ் மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது - எம்.ஏ.சுமந்திரன் Mp !

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார். அவர் ரணிலை ஆதரித்தபோதும் அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின்போதும் “முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தியதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நடாத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஆனால் இடையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கூட்டமைப்பினர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதியினரை முதல்கட்டமாக விடுவிக்குமாறு” கோரியிருந்தனர்.

தற்போது உள்ள அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை 47 பேர் வரை சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் அதிகமாக 27 வருடங்கள் தொடங்கி 13 வருடங்களுக்கு இடைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் வழமைபோன்று தனது ஏமாற்று வேலையை ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக சுமார் 25 பேர் வரையான அரசியல் கைதிகள் அவசர அவசரமாக பிணை வழங்கி விடுவிக்கப் பட்டிருந்தனர். அதே பிணை வழங்கிய கைதிகளையே இந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுதலை செய்வதற்கான முயற்சியில் அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றது.

தற்போது அரசாங்கம் விடுவிப்பதற்காக முயற்சித்து வரும் கைதிகள் யாருமே விடுவிக்கப்பட கூடாதவர்கள் என்பதல்ல. அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்களே அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது விடுவிக்கப்பட உள்ளவர்கள் யாருமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்களே அல்லர். எல்லோருமே இருபது இருபத்தி இரண்டு பராயத்தை உடையவர்கள்.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் ஆறு ஏழு வயது சிறுவர்களாக இருந்தவர்கள். யுத்தம் முடிந்த பின்னர் ‘மாவீரர் நாளுக்கு விளக்கேற்றினார்கள், தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிந்தார்கள்’ போன்ற காரணங்களுக்காக புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

தற்போது பிணையில் உள்ள இவர்களையே ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுவித்துவிட்டு ஐ. நா வையும், தமிழ் மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது. இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது என்பதுதான் வேதனை என தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App