சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 3 வீடுகள் முழுமையாகவும் 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 9 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App