நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குனர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இந்த நாட்களில் கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் செவிப்புலன் கருவிகள் பற்றாக்குறை சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட உபகரணங்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App