எரிவாயு வாங்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து 130 கோடி கொள்ளை : கோப் குழுவின் முன்னாள் தலைவர்

நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய எரிவாயு பற்றாக்குறையைப் போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் 130 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

36 டொலருக்கு கொள்வனவு செய்யவிருந்த ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை 129 டொலருக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப் பட்டமையால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கஷ்டத்தில் இருக்கும் போது உலக வங்கி வழங்கிய உதவித் தொகையை கொள்ளையடிக்கும் நிலைக்கு இந்தக் கும்பல் வந்துவிட்ட தாகக் கூறிய அவர், அந்தப் பணத்தை யார் எடுத்து யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது அப்பாவி மக்களுக்குத் தெரியாது என்றார்.

கண்டியில் நடைபெற்ற ‘சுதந்திர ஜனதா சபை’யில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App