இலங்கையில் ஒருவர் ஒரு மாதம் வாழ 13,137 ரூபா போதும் -அரசின் அண்மைய அறிக்கை !

இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ்வதற்கு குறைந்தபட்ச தொகையாக 13,137 ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

முந்தைய மாதத்தில் இதே எண்ணிக்கை 12,444 ரூபாவாகக் காட்டப்பட்டது, இம்முறை வளர்ச்சி 5.57% ஆக உள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 52,552 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 56,676 ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App