துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் பலி !

கடந்த மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கிடையில் காணப்படும் தகராறுகள் காரணமாக இந்த கொலைகள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை இறுதியாக இடம்பெற்ற சம்பவமாக பதிவாகியுள்ளது.
Published from Blogger Prime Android App