ஒரு லீற்றர் டீசலில் 31 ரூபா நஷ்டம் -எரிசக்தி அமைச்சர் விளக்கம் !

இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்துக்கு ஓட்டோ டீசல் விற்பனை மூலம் ஒரு லீற்றருக்கு 31 ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதை அவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள எண்ணெய் நிறுவன தரவு விளக்கப்படத்தில் காணலாம்.

எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் 187 ரூபாவும், ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் மூலம் 77 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு 48 ரூபாவும் கூட்டுத்தாபனம் பெறுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App