4 நாட்களில் 10 மில்லியன் ரூபா வருவாய் !

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15 ஆம் திகதி முதல் நேற்று வரை சுமார் 10 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நேற்று இரவு 8 மணிவரை 6800 இற்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக அதன் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரை கோபுரத்தை பார்வையிட 500 ரூபா நுழைவுச்சீட்டுக்கள் மட்டுமே தங்போது வழங்கப்படுவதுடன், தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App