4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு

இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது.
இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது.

செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Published from Blogger Prime Android App