70 % ஊழியர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் - எரான் விக்ரமரத்ன

2022 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கை இலங்கையில் ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 62,220 ரூபாய் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

வேலையில் ஈடுபட்டுள்ளவர்களில் 70% பேர் 62,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெறுவதால், நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை நன்கு சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போசாக்குக் குறைபாடு தொடர்பான யுனிசெப் அறிக்கையை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் வாதிடுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,வறுமை நிலைமை மோசமடைந்துள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது.

அத்துடன், நாட்டின் சனத்தொகையில் சுமார் 30% பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்ததுடன், சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், 2019 இல் 4000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் தனிநபர் வருமானம் கொண்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடாக அறியப்பட்ட இலங்கை, தற்போது 3850 அமெரிக்க டொலர்களுக்கு தனிநபர் வருமானத்துடன் குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாறியுள்ளது, இது நெருக்கடியின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.

கல்வியறிவு விகிதத்தில் அதிக சதவீதத்தைக் கொண்டிருந்த இலங்கை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆசியாவிலேயே மிகவும் ஏழ்மையான நாடாக மாறியுள்ளது, ஏனெனில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, குறைந்த அறிவுத்திறன் கொண்ட குழந்தைகள் பிறக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App