கோட்டாவை கைது செய்ய வேண்டும் : அவருடைய செயல்களுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் !

இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன . மக்கள் போராட்டத்தின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ​​ஜூலை மாதம் இராணுவப் பாதுகாப்புடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

73 வயதான அவர் சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார், அங்கிருந்து தாய்லாந்து சென்று சில வாரங்கள் ஹோட்டலில் தங்கியிருந்தார் .

ஜனாதிபதி அதிகாரத்தை இழந்துள்ள கோட்டாபய ராஜபக்ச இப்போது கடந்தகால குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு எதிரான அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
“எந்த நாடும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, அவர் மறைந்து கொள்ள இடமில்லை, எனவே கோத்தபாய திரும்பினார்,” என்று ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் AFP இடம் கூறியுள்ளார் .

“இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இத்தகைய வேதனையை ஏற்படுத்தியதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.” அவரது செயல்களுக்கான பொறுப்பு வழங்கப்பட வேண்டும். அவருடைய செயல்களுக்கு அவர் மட்டுமே பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இலங்கைப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை நோக்கிச் சென்றதால், ராஜபக்சேவின் அரசாங்கம் குழப்பமான தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் போராட்டக்காரர்களால் குற்றம் சாட்டப்பட்டது.

உணவுப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, நீண்ட மின்தடை மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஆகிய நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டார்கள் எனவே எதுவும் நடக்காதது போல் அவரால் சுதந்திரமாக வாழ முடியாது” என்று ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ராஜபக்சவை அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் வரவேற்றுள்ளனர் . ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தலைநகரில் உள்ள புதிய உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்புத் தொடரணியில் கோட்டாபய அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதில் கோட்டாவின் பங்கு உட்பட, பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜபக்சவின் மீது வழக்குத் தொடர அழுத்தம் கொடுப்பதாக உரிமை ஆர்வலர்கள் உறுதியளித்துள்ளனர்.

“அவர் இழைத்த குற்றங்களுக்காக அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கு அவர் நாடு திரும்பும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்” என்று இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தரிந்து ஜெயவர்தன வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார் .

ராஜபக்சே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் மீது போடப்பட்ட பல ஊழல் வழக்குகள் முடங்கின. 2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் தமிழ் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்காக குற்றச்சாட்டுகளை கோட்டா எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App