உளநல அவசர ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்.கடந்த இரண்டு வருடத்திற்கும் அதிகமாக கொவிட் பரம்பல், பொருளாதார நெருக்கடியென உளநலச் சிகிச்சை தேவையுடைய நோயாளிகள் ( Psychiaric patients ) வைத்தியசாலைகளை நாடுவது வெகுவாகக் குறைந்துள்ளதுடன் சில நோயாளிகள் சிகிச்சை எடுக்காது விகாரமாக நடந்துகொள்வது அறிவிக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மாதாந்தம் ஊசிமருந்தேற்றிக்கொள்ளும் நோயாளியொருவர் கடந்தவாரம் தூக்கிட்டு தற்கொலை செய்துமிருந்தார்.


எமது மாவட்ட உளநல ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி Dr. டன் சௌந்தரராஜன் அத்துடன் ஏனைய உளநல வைத்திய அதிகாரிகள் குழாமுடன் ஆலோசனை மேற்கொண்டதன் பயனாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் ஒரு வெளிக்கள உளநல உத்தியோகத்தர் ஒருவர் என 14 பேரை நியமித்ததுடன் கச்சேரி, பிரதேச செயலகம் போன்ற இடங்களில் கடமை புரிந்த பல சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 5 தாதிய உத்தியோகத்தர்கள் என ஒரு வலுவான சமூதாய உளவள குழாமொன்றையும் உருவாக்கியிருந்தோம்.

அத்துடன் அவர்கள் அவசர நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கூட்டிவர பிரத்தியேக அம்புலன்ஸ் வண்டியொன்றையும் வழங்கியிருந்தேன். இன்று ஆரம்பித்த அம்புலன்ஸ் சேவைமூலம் சிகிச்சை எடுக்காது ஒழிந்திருந்த 4 நோயாளர்கள் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள். விரைவில் பொதுமக்களுக்கான ஒரு அவசர தொலைபேசி இலக்கத்தையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
பிராந்திய சுகாதார சேவையை தேவையுள்ள அத்தனை பக்கமும் திருப்புவதற்கு துணைபுரிந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். எமது சமூகத்திற்கான அர்ப்பணிப்பான சேவைகள் இன மத பிரதேச வேறுபாடுகளின்றி அனைவருக்கும் சமமாக கிடைக்கும்.