இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் இணைய வழி மூலம் விற்பனை !

3 ஆயிரம் டொலர்கள் பெறுமதி வரையான இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்களை இணைய வழி மூலம் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்காக சமர்பிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 300 அமெரிக்க டொலர்களாக இத்தொகை வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வருகை தராமல் பிரதான தபால் நிலையங்கள் ஊடாக சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்த பின்னர் தேசிய இரத்தின கல் மற்றும் தங்காபரண இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App