கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு !

மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 32 வது ஆண்டு நினைவேந்தல் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் முன் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாணவர்கள் என பலரும் கலநதுகொண்டனர்.

தமக்கான நீதி கோரி கவனஈர்ப்பு போராட்டமொன்று நடாத்தப்பட்டதுடன்
காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். 

அங்கு செப்டம்பர் 5 ஆந் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது 157 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
Published from Blogger Prime Android App