களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருக்கு எதிராக காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் உறுப்பினர் வினோத் கடந்த 15-09-2022 அன்று பிரதேச சபை அமர்வின் போது அனாகரியமான முறையில் நடந்து கொன்டார் என்பதற்கு எதிராகவே இந்த ஆற்பாட்டம் (23) நடைபெற்றது.

அரச உத்தியோத்தருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கின்ற வகையிலும் பெண் உத்தியோகத்தர் என்று இழக்காரமான என்னத்துடன் அசிங்கமான வார்த்தை பிரயோகங்களை நாகரிகமற்ற முறையில் சபையில் கூச்சல் இட்டமை ஒரு அரசியல் செயற்பாட்டாளருக்கு அப்பால் காட்டுமிரன்டிதனத்தினை அவ்விடத்தில் பிரதிபலித்தமை குறிப்பிடத்தக்கது.

இனி வருங்கலங்களில் பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான செயல்பாடுகளை இவர்கள் கைவிட்டு மக்களின் அபிவிருத்தி செயல்பாடுகளில் நாட்டத்தினை முன் எடுக்கப்படவேண்டும் என ஆற்ப்பாட்ட காரர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

களுவாஞ்சி குடி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக மகளிர் குழுக்கள், மாதர் சங்கங்கள் ,பெண் அமைப்புகள் இணைந்தும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை காந்தி பூங்காவில் இன்று நடத்தியிருந்தனர்.

பெண்களுக்கெதிரான நாகரிகமற்ற வார்த்தை பிரயோகத்தினை உபயோகித்திருந்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் பெண்களுக்கு எதிராக அவதூறு பேசிய பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி பெண்ணமைப்பினரால் கோரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published from Blogger Prime Android App